கர்நாடக கவர்னரின் பெயரை ஒவ்வரு இந்தியனும் தங்கள் ​நாய்க்கு வைப்பார்கள் : காங்கிரஸ் தலைவர்!

கர்நாடக கவர்னரின் பெயரை ஒவ்வரு இந்தியனும் தங்கள் ​நாய்க்கு வைப்பார்கள் : காங்கிரஸ் தலைவர்!

மகராஷ்டிர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் ,கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா குறித்து கூறியுள்ள கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க வருமாறு அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறையை மேற்கொள்ள மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், போபையாவை இடைக்கால சபாநாயகராக ஆளுநர் நியமித்தார்.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னதாகவே தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்தில் உருக்கமான உரையாற்றினார்.

எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டன. நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக மகராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உண்மையாக இருப்பதில் நாட்டிலேயே புதிய சாதனையை வஜூபாய் வாலா படைத்திருப்பதாக குறிப்பிட்டதுடன், இனி ஒவ்வொரு இந்தியனும் அவர்கள் வளர்க்கும் நாய்களுக்கு வஜூபாய் வாலா எனப் பெயரிடுவர், ஏனெனில் இவரை விட யாராலும் உண்மையாக இருக்க முடியாது என்றார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here