திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா துவங்கியது!!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா, சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் நேற்று தொடங்கியது. கோயிலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து காப்பு கட்டப் பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் மைய பகுதியில் உள்ள மேடையின் அடிப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஊஞ்சலில் சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்சவம் நடந்தது. இந்த உற்சவம் மே 27 வரை நடக்கும்.

பால்குட திருவிழாவை முன்னிட்டு மே 28 அதிகாலை சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, விசாக கொறடு மண்படத்தில் எழுந்தருளுவர். பக்தர்கள் பாதயாத்திரையாக சுமந்துவரும் பால் குடங்களில் இருக்கும் பால், சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். மே 29 காலையில் சுவாமி, தெய்வானை தங்ககுதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் எழுந்தருளுவார். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here