என்னதான் தவறு செய்தாலும், இறந்தவர்களை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. அதற்க்காக அவர்களை தியாகியாக சித்தரிப்பதும் ஏற்புடையது அல்ல.

அரசியலில் எந்த அனுப்பமும் இல்லாத ராஜீவ்காந்தி, தன் அண்ணன் சஞ்சய்காந்தி மறைவுக்கு பின் 1981ஆம் ஆண்டு அமேதி பாராளமன்ற தொகுதியில் போட்டியிட்டு பாராளமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

இந்திரா காந்தி 31 அக்டோபர் 1984ல் சீக்கிய பாதுகாவலார்களால் படுகொலை செய்யப்பட்டபோது, ராஜீவ்காந்தி பிரதமர் ஆனார். அப்பொழுது அவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லாததால் அதிகாரிகளின் உதவியுடன் முக்கிய முடிவுகளை எடுத்தார்.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, இவர் சார்ந்த காங்கிரஸ் கட்சினர் பலர், இந்தியா முழுவதும் இருந்த பல சீக்கியர்களை கொன்று குவித்தனர். அவர்களில் பலர் இன்னும் தண்டிக்கபடவில்லை.

இந்திய பிரதமரின் பொறுப்பான பதில்:

தன் குடிமக்களான சீக்கியர்கள் கொன்று காங்கிரஸ் கட்சினர் கொன்று குவித்த போது , எந்த ராஜநீதியும் இல்லாமல் வேடிக்கை பார்த்தது மட்டும் இல்லாமல், “பெரிய மரம் விழும் போது, பூமி அதிரத்தான் செய்யும்” என்று பொறுப்பான பதிலை சொன்னவர் தான் இவர்.

இந்திய அமைதிப்படை:

இலங்கைக்கு, இவர் அனுப்பி வைத்த இந்திய ராணுவத்தினர் ஈழ தமிழர்களுக்கு எதிராக படுகொலை மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபட்டனர். 1989ல் நடந்த பாராளமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல், பாராளமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஸ்ரீபெரும்பூரில் 21-5-1991 படுகொலை செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here