கார்பொரேட் நிறுவனங்களால் நான், கார்பொரேட் நிறுவனங்களுக்காவே நான் என்று, இன்று பல அரசியல் கட்சிகள் செயல் பட்டு வருகின்றன. கார்பொரேட் நிறுவனங்களில் அதிகாரிகள் பணம் வாங்கினால் அதன் பெயர் லஞ்சம். ஆனால் அரசியல் காட்சிகள் வாங்கினால் அதன் பெயர் நன்கொடை.

அரசியல் கட்சிகள், பணம் அளித்த நிறுவனங்களுக்காக செயல் படுவார்களா? இல்லை மக்களுக்காக குரல் கொடுப்பார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இதில் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனம் வேதாந்தா என்பது குறிப்பிட தக்கது. வேதாந்தாவை தாய் நிறுவனங்களாக கொண்ட நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் நன்கொடையாக வாங்கிய பணம் எவ்வளவு என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தொகை  (₹) வருடம் அரசியல் கட்சி தாய் நிறுவனம்
Sterlite Industries Ltd 10,000,000.00 FY 04-05 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 04-05 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 04-05 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 200,000.00 FY 04-05 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 05-06 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 05-06 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 200,000.00 FY 06-07 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 1,500,000.00 FY 07-08 காங்கிரஸ் வேதாந்தா
Solaries Holding Ltd 5,000,000.00 FY 09-10 காங்கிரஸ் வேதாந்தா
Solaries Holding Ltd 5,000,000.00 FY 09-10 காங்கிரஸ் வேதாந்தா
Sterlite Industries (India) Ltd. 50,000,000.00 FY 09-10 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 3,000,000.00 FY 09-10 காங்கிரஸ் வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 05-06 பிஜேபி வேதாந்தா
Sesa Goa Ltd 200,000.00 FY 06-07 பிஜேபி வேதாந்தா
Sesa Goa Ltd 1,500,000.00 FY 07-08 பிஜேபி வேதாந்தா
Sesa Goa Ltd 1,250,000.00 FY 07-08 பிஜேபி வேதாந்தா
Vedanta The Madras Aluminum Ltd 30,000,000.00 FY 09-10 பிஜேபி வேதாந்தா
Vedanta The Madras Aluminum Ltd 5,000,000.00 FY 09-10 பிஜேபி வேதாந்தா
Sesa Goa Ltd 5,000,000.00 FY 09-10 பிஜேபி வேதாந்தா
Sesa Goa Ltd 1,000,000.00 FY 09-10 பிஜேபி வேதாந்தா

Courtesy: The Wire

இன்று நடந்த ஸ்டெர்லிட் ஆலைக்கு எதிராக நடத்த அமைதியான போராட்டத்தை வழக்கம் போல் வன்முறை போராட்டமாக காவல்துறை மாற்றியுள்ளது. காவல்துறை எப்படி தானே தீ வைத்து அமைதி போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்றும் என்பதை என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் நேரடி ஒளிபரப்பில் பார்த்து தெரிந்துகொண்டுயுள்ளனர் .

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்னன் தனக்கு ஸ்டெர்லிட் ஆலை லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாற்றியிருந்தார். இன்று அரசு அதிகாரிகளும் , காவல் துறை அதிகாரிகளும் ஆலைக்கு ஆதரவாக் செயல் படுவது பல சந்தேகங்களை எற்படுத்தியுள்ளது.

இன்று துப்பாக்கி சூட்டில் பொதுமக்களை கொன்று குவித்தத்தின் மூலம் மீண்டும் தாங்கள் மக்களின் நண்பர்கள் இல்லை. டாஸ்மாக், ஸ்டெர்லிட் ஆலை போன்றவற்றை பாதுகாப்பதே தங்களின் முதல் பணி என்பதை காவல்துறை நண்பர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here