இஸ்லாமாபாத்: பாகிஸ்தானால் இஸ்ரேலை 12 நிமிடத்திற்குள் அழிக்கமுடியும் , என ஒரு மூத்த இராணுவ தளபதி கூறினார்.
பாகிஸ்தான் ஜெனரல் ஜுபிர் மஹ்மூத் ஹயத் கூறியது: “இஸ்ரேல் நம் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றால், 12 நிமிடங்களுக்குள் சியோனிஸம் ஆட்சியை நாம் தூக்கி எறிவோம்.”
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசுகையில், “யூதர்கள் எங்கள் (பாகிஸ்தான்) எதிரிகள் என்று நான் ஒத்துக்கொள்வதில்லை, சியோனிசம் மற்றும் யூதாசம் இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் ஆகும்,
பாலஸ்தீனியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று இஸ்ரேல் நம்புகிறது. ஆனால் இது உண்மை இல்லை, “என்று அவர் கூறினார்.
“எகிப்து மற்றும் ஜோர்டான் போல் நாடுகளைப்போல், இஸ்ரேலை பாகிஸ்தான் அங்கிகரிக்குமா?” என கேட்டதற்க்கு, “இல்லை” என்று பதில் அளித்தார்.