சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக என்பதால், தமிழக அரசை யார் இயக்குகிறார்கள் என்பது தெரிந்துவிட்டது என்று ப.சிதம்பரம்
ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா?
— P. Chidambaram (@PChidambaram_IN) May 23, 2018
ஸ்டர்லிட்டின் தாய் நிறுவனமான வேதாந்தாவில், 2004ஆம் ஆண்டு மே மாதம் வரை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.