இதுவரை ஸ்டெர்லிட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 12 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது பொதுமக்களை நோக்கி குறிப்பார்த்து சுடும் காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை அந்த வீடியோவில் பயன்படுத்தியது INSAS ரைபிள்.
INSAS ரைபிள்:
INSAS ரைபிளை கார்கில் போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன் படுத்தியது. நக்சலைட்க்கு எதிராக துணை ராணுவப்படையும் இதைத்தான் பயன்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி 1/2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவரையும் குறிப்பார்த்து துல்லியமாக சுடமுடியும். நியாயமான கோரிக்கையாக இருந்தாலும் அரசுக்கு எதிராக போராடினால், காவல்துறையை பொறுத்தவரை அவர்களும் திவரவாதிகள் தான். இதனால் தான் INSAS ரைபிளை பயன்படுத்தினார்களோ என்னவோ?
இன்றைய தமிழக காவல்துறை ஆங்கிலேயர் காலத்தில் மக்களை அடித்து மிரட்டி ஆட்சி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அன்று கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போராடிய மக்களை கொன்று குவித்தது இந்த காவல்துறை. இன்று அதே இங்கிலாந்தை சேர்த்த வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஸ்டெர்லிட்க்கு எதிராக போராடிய 12 பேரின் உயிரை குடித்துள்ளது தமிழக காவல்துறை.
சட்டப்படி சரியே:
144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் சட்டப்படி, போராடிய மக்களை கொன்று குவித்ததற்கு சட்டப்படி ஒன்றும் செய்யமுடியாது. தருமப்படி அவர்கள் செய்தது மிருகத்தனமானது, மனிதத்தம்மை அற்றது. குடிசைகளையும், ஆட்டோக்களையும் தீவைத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எரித்த காவல்துறையிடம் மனிதநேயத்தை எதிர்பார்ப்பது மக்களின் தவறு. அன்று தீ வைத்த காவல்துறை சேர்த்த அந்த கொடூர பெண் போலீஸ் இதுவரை கைது செய்ய படவில்லை. ஜல்லிக் கட்டு வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையம், மூன்று மாதத்துக்குள் 23 ஏப்ரல் 2017க்குள் அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். தற்போது ஒரு வருடம் கடந்து விட்டது. நீதிபதி ராஜேஸ்வரன், அரசு செலவில், மக்கள் வரிப்பணத்தில், மாதம் ஒன்றரை லட்சத்துக்கு மேல் ஊதியம் என்று சொகுசாக வசதிகளை அனுபவிக்கும் அவர் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை. இதே போல் தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்க படும் ஆணையமும் செயல்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
கம்ப்யூட்டர் ரோபோக்கள் தனக்கு குடுத்த ஆணையை சரியாக செய்யும், அதுபோல் இவர்களும் அவர்களுக்கு அதிகாரிகள் கொடுத்த ஆணையை சரியாக செய்து முடித்து உள்ளார்கள். இதனால் இவர்கள் கடமையை சரியாக செய்பவர்கள் என்று பொருள் இல்லை. இவர்களின் கடமை, தைரியம் எல்லாம் பொதுமக்களிடம் மட்டும் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்த பொழுது, அதிமுகவினர் செய்த வன்முறையை கைகட்டி வாய்பொத்தி பார்த்தவர்கள் தான் இந்த கடமை தவறாத காவல்த்துறையினர். அரசியல்வாதி, பணக்காரர்கள், மற்றும் அதிகாரியிடம் அதிகாரம் பலிக்காது. பிஜேபி தலைவரும், தலைமை செயலாளரின் உறவினர் ஆன எஸ்.வி.சேகரை கைது செய்ய இவர்கள் எடுத்த நடவடிக்கையே இவர்களின் கடமை உணர்வுக்கு சாட்சி. இவர்களின் தலைவர் டிஜிபி ராஜேந்திரன், குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிட தக்கது.
தீ வைத்தது யார்?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீ வைத்தது போல் இந்த போராட்டத்திலும் காவல்துறையே தீ வைத்து கலவரமாக மாற்றியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். அவர்கள் கூறுவது போல் வன்முறையை துண்ட தீ வைப்பவர்கள் தான் இந்த காவல் துறையினர் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.
திட்டமிட்ட படுகொலை :
இந்த துப்பாக்கிசூட்டில் பலியானவர்களில் பலர் இந்த போரட்டத்தில் முன் நின்று மக்கள் முன் பேசி போராடியவர்கள். இவர்களை கொண்டுவிட்டால் மக்கள் போராட்டத்தை முன்னின்று போராட யாரும் வரமாட்டார்கள் என்று திட்டம்மிட்டு இந்த மனிதநேயமற்றவர்கள் துணையுடன் அவர்களிடம் நன்கொடை என்னும் பெயரில் பணம் வாங்கும் இந்த ஆட்சியாளர்கள் ஏன் செய்து இருக்க மாட்டார்கள் ?
மனித உரிமை:
ஆடெர்லிகளாக பலர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்ப்பது சட்டமீறல், மனித உரிமை மீறல் என மக்கள் இந்த காவலர்களுக்கத்தான் குரல் கொடுத்தனர். ரவுடிகள் போலீஸால் சுட்டு கொல்லப்படும் போது, இவர்களுக்காக மனித உரிமை பேசாதீர்கள் என தொலைக்காட்சி விவாதங்களில் யாராவது ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வந்து பேசுவார். பொதுமக்களை கொன்று குவித்த இந்த அரசாங்க பயங்கரவாதிகளும் மனிதஉரிமை கிடையாது.
சமூக ஊடகம்:
போராட்டத்தில் INSAS ரைபிளை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை சேர்த்த ராஜா திலீபனை மக்கள் அடையாளம் கண்டு இவரின் படத்தை சமூக ஊடகத்தில் பரப்பிவருகின்றனர். இதே போல் பிறரையும், அடையாளம் கண்டு அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் இந்த சமூகம் ஒதுக்கி வைப்பது தான் இதுபோல் மிருகங்களாக நடந்துகொள்ளும் காவலர்களுக்கு ஒரு படமாக அமையும்.