சென்னை: தூத்துகுடியில் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்த்துறை செய்த கொடூர கொலைக்கு விளக்கும் அளிக்க இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொது “துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு இதுவரை ஏன் நீங்கள் செல்லவில்லை ?” என்று கேட்டனர், அதற்க்கு எடப்பாடி பழனிசாமி, “நான் சட்டத்தை மதிப்பவன், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் நான் அங்கு செல்லவில்லை. ஆனால் சட்டத்தை மதிக்காமால் ஸ்டாலின் மக்களை சந்தித்ததார்” என்று பொருள்படுமாறு கூறினார்.
“உங்களை யாராவது அடிக்கும் போது தடுப்பது தான் இயற்கை, இதை யாரும் திட்டமிட்டு செய்வது இல்லை” என்று கூறிய அவர், அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மக்களை கண்மூடி தானமாக சுட்டு கொல்லும்போது மக்களும் திருப்பி தாக்குவது இயற்கையா ? அல்லது அவரை போல் சட்டத்தை மதித்து, அரசாங்க அதிகாரியின் சுட்டு கொல்லும் கடமையை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டுமா என்பதை நமது தமிழகத்தின் சாமிதான், தன் மக்களுக்கு போதிக்க வேண்டும்.