தூத்துக்குடி ஸ்டெர்லிட் பிரச்சனை, பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை!!

புதுடெல்லி: தூத்துக்குடியில் ஸ்டெர்லிட்க்கு எதிராக போராடிய 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்க்கு இதுவரை அவர் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஆனால் இவர் தற்போது ட்விட்டரில், விராட் கோலியின் உடற்பயிற்சி போட்டியை ஏற்று கொண்டுள்ளார். தானும் தனது விடியோவை விரைவில் பதிவேற்றுவதாக கூறியுள்ளார்.

 

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவி ஜோதிமணி , “அம்பானி மனைவியின் புதிய ப்ராஜெக்ட்டுக்கெல்லாம் டிவிட்டரில் வாழ்த்து சொல்லும் பிரதமருக்கு தமிழகத்தில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டது தெரியாதா? இல்லை தமிழக பிஜேபி உங்கள் ஆசீர்வாதத்தோடுதான் படுகொலையை ஆதரிக்கிறதா?” என ட்விட்டரில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின், பிஜேபி கட்சி தான் சமீபத்தில் ஸ்டெர்லியின் தாய் நிறுவனமான வேதாந்தாவிடம் அதிகமாக நன்கொடை என்னும் பெயரில் பணம் பெற்ற கட்சி என்பது குறிப்பிடதக்கது. மேலும் பிரதமரின் லண்டன் பயணத்தின் போது, அங்குள்ள பத்திரிகைகளில் மோடியை வரவேற்று பெரியளவில் வேதாந்தா விளம்பரம் செய்து இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here