சென்னை: வன்னியர் சங்க தலைவர், காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. காடுவெட்டி குரு அவர்கள், பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
வன்னியர் சங்க தலைவராக இருந்த இவர், வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.