பணம் பாதாளம் வரை பாயும் என்பது போல், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லிட் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியிருந்தார். ஸ்டெர்லிட் நிறுவனமும் தங்களிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகளின் பட்டியலை வெளியிடுவோம் என்று மிரட்டியிருந்தது. இதே போல் அவர்கள் ஏன் அரசு அதிகாரிகளிடம் பணம் கொடுத்திருக்க மாட்டார்கள்?

ஸ்டெர்லிட்டின் தாய் நிறுவனமான, வேதாந்தாவின் 2011-12ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி 20.1 லட்சம் அமெரிக்க டாலர்களை அரசியல் கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளது. பொதுத்தேர்தல் நடந்த 2009-10 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி 36.6 லட்சம் அமெரிக்க டாலர்களை அரசியல் கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழித்த நம்ம பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி 2010ஆம் ஆண்டு வரை ஸ்டெர்லிட் போன்ற வேதாந்தாவின் கிளை நிறுவனத்திடம் பெற்ற நன்கொடை:

நிறுவனம் தொகை  (₹) வருடம் கட்சி தாய் நிறுவனம்
Sesa Goa Ltd Sesa Ghor 500,000.00 FY 05-06 BJP வேதாந்தா
Sesa Goa Ltd 200,000.00 FY 06-07 BJP வேதாந்தா
Sesa Goa Ltd 1,500,000.00 FY 07-08 BJP வேதாந்தா
Sesa Goa Ltd 1,250,000.00 FY 07-08 BJP வேதாந்தா
Adani Wilmar Ltd 5,000,000.00 FY 08-09 BJP வேதாந்தா
The Madras Aluminum Ltd 30,000,000.00 FY 09-10 BJP வேதாந்தா
The Madras Aluminum Ltd 5,000,000.00 FY 09-10 BJP வேதாந்தா
Sesa Goa Ltd 5,000,000.00 FY 09-10 BJP வேதாந்தா
Sesa Goa Ltd 1,000,000.00 FY 09-10 BJP வேதாந்தா

 

வெளிநாட்டு நிறுவனக்களிடம் நன்கொடை வாங்க கூடாது என்று வெளிநாட்டு நன்கொடை(Foreign Contribution Regulation Act) சட்டங்கள் அமலில் இருந்த நிலையில், சட்டவிரோதமாக பெறப்பட்ட நன்கொடைகள் இவை. இது தொடர்பான வழக்கில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் குற்றவாளி என்று டெல்லி உயர் நீதிமன்றத்தால் 2014ஆம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டு, இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தது.

காங்கிரஸ் 2010ஆம் ஆண்டு வரை பெற்ற நன்கொடை:

நிறுவனம் தொகை  (₹) வருடம் கட்சி தாய் நிறுவனம்
Sterlite Industries Ltd 10,000,000.00 FY 04-05 INC வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 04-05 INC வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 04-05 INC வேதாந்தா
Sesa Goa Ltd 200,000.00 FY 04-05 INC வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 05-06 INC வேதாந்தா
Sesa Goa Ltd 500,000.00 FY 05-06 INC வேதாந்தா
Sesa Goa Ltd 200,000.00 FY 06-07 INC வேதாந்தா
Sesa Goa Ltd 1,500,000.00 FY 07-08 INC வேதாந்தா
Solaries Holding Ltd 5,000,000.00 FY 09-10 INC வேதாந்தா
Solaries Holding Ltd 5,000,000.00 FY 09-10 INC வேதாந்தா
Sterlite Industries (India) Ltd. 50,000,000.00 FY 09-10 INC வேதாந்தா
Sesa Goa Ltd 3,000,000.00 FY 09-10 INC வேதாந்தா

 

கூட்டு களவாணிகள் :
FCRA, 1976 பிரிவு 2(C) யின் படி வெளிநாட்டு நிறுவனங்கலான வேதாந்தா, டவ் கெமிக்கல்ஸ் போன்ற நிறுவனங்களிடம் சட்ட விரோதமாக பெற்ற நன்கொடையை, சட்டப்பூர்வமாக மாற்ற Finance Bill, 2018 (Clause 217) மூலம் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, மக்களவையில் எந்த விவாதமும் இன்றி பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் நிறைவேற்றப்பட்டது.

ப.சிதம்பரம்

ஸ்டர்லிட்டின் தாய் நிறுவனமான வேதாந்தாவில், 2004ஆம் ஆண்டு மே மாதம் வரை இயக்குனராக பணியாற்றியவர் ப.சிதம்பரம். 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நிதி அமைச்சர் ஆவதற்க்காக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் .

2007 ஆம் ஆண்டு சீசா கோவா(Sesa Goa) என்னும் இரும்பு தாது தயாரிக்கும் நிறுவனத்தை வாங்க வேதாந்தா பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தான் 2007ஆம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில், இரும்பு தாதுவின் எற்றுமதி வரியை ஒரு டன்க்கு ரூ.300 ஆக சிதம்பரம் உயர்த்தினார். இதனால் சீசா கோவா நிறுவனத்தின் பங்குகள் 20% சரிந்தன. இதன் காரணமாக சீசா கோவா நிறுவனத்தின் விலையை குறைத்து 4070 கோடி ரூபாய் வேதாந்தா வாங்கியது.

வேதாந்தா, சீசா கோவா நிறுவனத்தை வாங்கிய இரண்டு மாதத்திற்கு பிறகு, மே 3, 2007லில் வரியை ரூ.300ல் இருந்து ரூ.50 ஆக குறைத்தார், அப்போதைய மாண்புமிகு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள். இதனால் வேதாந்தா பெரும் லாபம் அடைந்தது.

அமலாக்கதுறை 2003 ஆம் ஆண்டு வேதாந்தாவிற்கு எதிராக பதிவு செய்த வழக்கில், வேதாந்தாவிற்கு ஆதரவாக வாதாடியவர் இந்த ப.சிதம்பரம் தான்.

திமுக:

ஸ்டெர்லைட் ஆலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனுக்கு 600 லாரி ஓடுவதாக மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாற்றியுள்ளார்.

வைகோவின் மருமகனுக்கும் தொடர்பா?

ஆட்சியாளர்களிடம் சுமூகமாக நடந்து கொள்ளும் நீதிபதிகளில் சிலர், கவர்னர் அல்லது அரசு அமைக்கும் விசாரணை கமிஷன் தலைவர்களாக நியமிக்கப்படுவதை பார்த்து இருக்கின்றோம். ஏன் மதுரை க்ரானைட் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற கனிமவள அரசு அதிகாரிகள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல தான் ஸ்டெர்லிட் போன்ற நிறுவனங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் நூற்றுகணக்கான ஊழியர்கள் அந்த நிறுவனத்தை சாராத, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்படும் செக்யூரிட்டி சர்வீசஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் தான். சில அதிகாரிகள் ஆலையில் பாதுகாப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்படுவர். இதனை conflict of Interest என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

தற்போதைய டிஐஜி அஸ்வின் கோட்னிஸ் இதற்கு முன்பு தூத்துக்குடியில் எஸ்பியாக பணியாற்றியவர். இவரின் மனைவி அதித்தி ஜோஷி தற்போது ஸ்பிக் நிறுவனத்தில் மிக மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர். அந்த நிறுவனத்தின் முக்கிய நுகர்வோர் ஸ்டெர்லிட்யின் வேதாந்தா என்பது குறிப்பிட தக்கது.

அடுத்து என்ன நடக்கும்?
ஒருவேளை சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த ஆலை இயங்க தடை விதிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். இது முக்கியமான வழக்கு என்பதால், வழக்கம் போல் முக்கிய நீதிபதிகளின் ஒரு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியால் பரிந்துரைக்க படலாம். பிரதமரின் நண்பர் அணில் அகர்வாலின் நிறுவனமான இந்த வேதாந்தாவிற்கு எதிரான இந்த வழக்கில், அவர்கள் வழக்கம் போல் விசாரித்து நீதியை நிலைநாட்டுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here