தூத்துக்குடி: கூட்டமாக காவல்துறையினர் இருந்த தைரியத்தில், கூலிப்படை போல் செயல்பட்டு 13 பேரை கொன்று குவித்து உள்ளனர். மக்களை குறிபார்த்து சுட்ட காவலரில், சிலரின் பெயர் மற்றும் குடும்ப விபரம் சமூக ஊடகங்களில் வெளியான உடன் அவர்கள் தலை மறைவாக உள்ளனர். அவர்கள் தங்கள் வீட்டில் இல்லாததினால் அவர்களை பற்றி விசாரித்த பொழுது, அவர்கள் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள கலெக்டர் வெங்கடேஷ் அவர்களின் பாதுகாப்பில் திருநெல்வேலியில் தற்போது இருக்கலாம் என்று அவர்களை பற்றிய விபரம் அறிந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இன்று காலையில் ஒரு காவல்துறை வீரர், வீராவேசமாக ஃபேஸ்புக்கில் காவல்துறையின் வீரம் பற்றி பதிவு போட்டுக் கொண்டு இருந்தார். இப்போ அந்த பக்கத்தையே காணோம், அவரும் ஃபேஸ்புக்கில் இருந்து தலை மறைவு. பொதுமக்களின் வரிபணத்தில் வாங்குவதை பற்றி மக்கள் பேசுவதை விமர்சனம் செய்து இருந்தார் . அவருக்கான மக்களின் பதில் இதோ,
பொதுமக்கள் வாங்குகின்ற குண்டூசிலேருந்து, நாங்கள் வாங்கின்ற எல்லா பொருளுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு வரி காட்டுகின்றோம். பெட்ரோல்க்கு கிட்டத்தட்ட பாதி பணத்தை வாரியாக செலுத்துகின்றோம். அரசு ஊழியர் ஒருவர் காட்டுகின்ற சராசரி வருமான வரியை விட, சராசரியாக பொதுமக்கள் கட்டுகின்ற மறைமுக வரி (Indirect Taxes) அதிகம் என்பதை வெறும் அடியாளாகவும் கூலிப்படையாகவும் செயல்படும் இவரை போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
தமிழ்நாட்டில் விவசாயிகளும், மீனவர்களும், வெயிலும் மழையிலும் உழைத்து பொருள் ஈட்டுகிறார்கள். பொருள் ஈட்டுவதற்க்காக, யாரும் உங்களை போல் ஆளுநரால் அள்ளப்படுவதற்காக போடப்பட்டிருக்கும் குப்பைக்கு பாதுக்காப்பாக நிற்பதில்லை. அவர் குளியலறையை, ஆய்வு செய்ய பிற ஊர் செல்லும் போது, வழியெல்லாம் 100 அடிக்கு ஒரு ஆள் விதம், வெயிலிலும் மழையிலும் கால்கடுக்க நிற்கும் வேலையை எவ்வளவு பணம் கொடுத்தாலும் மானமுள்ள எந்த விவசாயியும், மீனவனும் செய்ய மாட்டான் . குறிப்பாக விவசாயிகளும், மீனவர்களும் யாரும், ஹோட்டல் ஊழியர்களை மிரட்டி இலவசமாக சாப்பிடுவது இல்லை.