தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும், காயமடைந்தவர்களை சந்திக்கவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ 27/5/2018 காலை தூத்துக்குடி வந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்த பொழுது காயம் அடைத்து, சிகிச்சை பெரும் ஒருவர், ஸ்டெர்லிட் அலை கிட்ட எவ்வளவு வாங்கிகிட்டு எங்களை சுட்டிங்கனு சொன்னால், அதை விட மக்களிடம் இரண்டு மடங்கு பணம் வசூலித்து தருகின்றேன் ஆலையை மூடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். இதை சற்றும் எதிர் பார்க்காத அமைச்சர் திணறினார். பலர் சிகிக்சை பெற்று வரும் பொது, இரண்டு பேரை மட்டும் சந்தித்த நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.