தூத்துக்குடி: அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்த பொழுது காயம் அடைத்து, சிகிச்சை பெரும் ஒருவர், ஸ்டெர்லிட் அலை கிட்ட எவ்வளவு வாங்கிகிட்டு எங்களை சுட்டிங்கனு சொன்னால், அதை விட மக்களிடம் இரண்டு மடங்கு பணம் வசூலித்து தருகின்றேன் ஆலையை மூடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். இதை சற்றும் எதிர் பார்க்காத அமைச்சர் திணறினார். பலர் சிகிக்சை பெற்று வரும் பொது, இரண்டு பேரை மட்டும் சந்தித்த நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில்இன்று துணை முதல்வர் ஓ.பண்ணீர் செல்வம் மருத்துவமனைக்கு செல்லும் போது மட்டும், அங்கு பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வில்லை. மேலும் தூத்துக்குடி பற்றி எரிந்த பொழுது, கட்சியினரின் வீட்டு பூப்பு நீராட்டு விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.