சென்னை: ரஜினி நேற்று தூத்துக்குடி சென்று திரும்பிய பின்னர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி தான் அதை கெடுத்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் போராட்டத்தை கெடுத்தனரோ அதே போல், தூத்துக்குடியில் கெடுத்தனர். போலீசார் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
சமூக விரோதிகள் போலீசாரை தாக்கினர். கலெக்டர் அலுவலகத்தை சூறையாடினர். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவர்களை வெளியே கொண்டு வந்து காட்ட வேண்டும். சமூக விரோதிகள் போலீசாரை அடித்தனர். இதன் பிறகு தான் பிரச்னை ஆரம்பமானது. மக்கள் , எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என போனால், தமிழ்நாடு சுடுகாடாகிடும், என்று காவல்துறைக்கு ஆதரவாகவும், பாரதிய ஜனதா மற்றும் அதிமுக தலைவர்களின் அதே கருத்தை கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு தோன்றிய நிலையில் அவரின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார்கே பாதுகாப்பா?
“இவர் நடித்த திரை படங்களில் தனது சொத்துக்களை ஏழை மக்களுக்கு வாரி கொடுத்து மக்களின் ஆதரவை பெற்றவர், மேலும் தவறு செய்த காவல்துறை அதிகாரிகளை அடித்து உதைத்தவர். பெரிய ரவுடிகள், தீவிரவாதிகள் மற்றும் தவறான காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றிய இவரை போன்ற சூப்பர் ஸ்டாருக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ள தெரியாதா?” என்பதே என்னை போன்ற தீவிர ரஜினி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.