காஞ்சிபுரம்: தமிழகத்தில் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் தற்போது பெருமாளுக்கு நாமம் போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பெருமாளை வணக்கும் ஐயங்கார் சாதியில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவு இருக்கிறது. தென்கலை பிரிவினர் நாமத்தை நன்கு நெற்றிக்கு கீழ் வரை இழுத்து போட்டு இருப்பார்கள். வடகலை ஐயங்கார்கள், கோவிலில் சமஸ்கிருத வேத பாடல்களை பாடுவார்கள். தென்கலை ஐயங்கார்கள் தமிழில் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களை பாடி பெருமாளை வழிபடுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று ஸ்ரீரங்கத்தில் போராட்டம் நடந்தது, திருப்பதியில் பெருமாளுக்கு நாமம் போடுவதில் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கருட சேவையில் பெருமாளுக்கு எந்த மொழியில் பாடுவது மற்றும் எந்த நாமம் போடுவது என்று இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு நடந்தது.