விஜயவாடா: 2024ஆம் ஆண்டில் 60 லட்சம் விவசாயிகளை, 100% வேதிப்பொருள் இல்லாத இயற்க்கை வேளாண்மையாக மாற்றுவதற்கான திட்டத்தை ஆந்திரா அரசு துவக்கியுள்ளது.இது ஒரு மகத்தான இயற்கை வேளாண்மையை நோக்கிய ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய திட்டம்(Zero Budget Natural Farming).

இந்த திட்டம் மூலம் 2024 ஆம் ஆண்டளவில் ஆந்திராவின் 60 லட்சம் பண்ணைகள் மற்றும் 80 லட்சம் ஹெக்டேர் நிலமும், ஜீரோ-பட்ஜெட் இயற்கை வேளாண்மைக்கு, மாறி இருக்கும். மேலும் இது 100 சதவீத இயற்கை விவசாய நிலத்தை உருவாக்கும்.

‘வறுமை ஒழிப்பு ‘, ‘சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்’, ‘பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி’ மற்றும் ‘நிலத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை’ என்னும் ஐ.நா.வின் நிலையான முன்னேற்றத்திற்கான கொள்கையின் அடிப்படையில், ஆந்திரா அரசு மற்றும் Rythu Sadhikara Samstha (RySS) என்னும் என்ஜிஓ இனைந்து இந்த திட்டத்தை ஐ.நா சுற்றுச்சூழல், BNP பரிபாஸ், உலக வேளாண் மையம் ஆகியவற்றின் பங்களிப்புடன் செயல் படுத்துகிறது.

இந்த திட்டத்தின் வெற்றி, இந்தியாவின் நிலையான முன்னேற்றதிற்கு மட்டும் அல்லாது உலகில் உள்ள பல விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய தூண்டும் உந்துகோலாக இருக்கும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here