காலா திரைப்படத்தை வெளியிடும் ஒவ்வரு திரையரங்கத்திற்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு அளிக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் டிஜிபி ராஜேந்திரன். இவர் குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தமிழக அரசால் பதவி நீடிக்கப்பட்டவர் என்பது குறிப்பிட தக்கது.
வழக்கமாக ஏதேனும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் என்றால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கபடும். அதுபோல் தற்போது காலா திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க பட இருக்கிறது. காவல்துறைக்கும், தமிழக அரசிற்கும் ஆதரவாக தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை பற்றி கருத்து தெரிவித்ததற்கு நன்றிக்கடனாக இந்த பாதுகாப்பை அளிக்கிறதா காவல்துறை?