கையாலாகாத போலீஸ், துப்பில்லாத போலீஸ் என்று எஸ்.வீ. சேகரால் விமர்சிக்கப்பட்ட தமிழக போலீஸ் இன்று அவர் விமர்சனத்தை உண்மையாக்கும் விதத்தில், அவரின் கைது விவகாரத்தில் கண்ணை மூடி கிடக்கிறது. உச்சநீதி மன்றமே இந்த எஸ்.வீ. சேகரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று உத்தரவு இட்டும் இவரை கைது செய்ய அஞ்சி நடுங்குகிறது. ஆனால் அவரோ போலீஸ் பாதுகாப்புடன் சென்னையை சுற்றி வருகிறார்.
தூத்துகுடியில் இரவில் பொதுமக்களை இரவில் இருட்டில் வேட்டையாடிய இந்த போலீஸ், பகலில் சென்னையை சுற்றிவரும் இவரிடம் தலை குனிந்து நிற்கிறது. தலைமறைவாக இருப்பது, இதுவே ஒரு சாதாரண பொதுமக்களாக இருந்தால் அவரின் உறவினரை மிரட்டி துன்புருத்தும் இந்த வீரமிக்க தமிழக காவல்துறை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினரான இந்த சுண்டைக்காய் எஸ்.வீ.சேகரிடம் மண்டியிட்டு நிற்கிறது. இவரின் கைதை பற்றி பேசுவதற்கு, சென்னை காவல்துறை ஆணையர் பயப்படுகிறார் என்றால் இதுவே தமிழக காவல்துறையின் வீரத்திற்கு சான்றாகும்.
போலீசால் தேடப்படும் ஒருவருடன் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அவர் அந்த பதவிக்கு என்ன மரியாதையை தருகின்றார் என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சியாகும்.