ராமநாதபுரம்: பொதுஇடத்தில் இளைஞர் ஒருவரை சட்டையை கிழித்து சரமாரியாக தாக்கிய போலீஸ் எஸ்.ஐ.,தினேஸ்

ராமநாதபுரம் எம்.எஸ்.கே., நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் டூவிலர் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி அன்று வாரவிடுமுறை என்பதால் மாலை நேரத்தில் தனது நண்பர் ராஜ்குமாருடன், சக்கரக்கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் அருகில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்துகொண்டு பேசியுள்ளார்.

அப்போது, அவ்வழியே ரோந்து வந்த எம்.எஸ்.கே., நகர் காவல்நிலைய எஸ்.ஐ., தினேஸ், விக்னேஸ்வரனிடம் இங்கே நிற்க கூடாது என சொன்னதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இது எங்கள் பகுதி.. இங்கு நிற்பதில் என்ன தவறு.. என விக்னேஸ்வரன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ., தினேஸ், இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு, விக்னேஸை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

அவர் சட்டையை கிழித்து தரதரவென இழுத்து சென்றுள்ளார். இதனை அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து அதனை இணையத்தில் பரப்பியுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் விடியோ வைரலாக பரவி வருகிறது.

இதுமட்டுமின்றி, எஸ்.ஐ., தினேஸ், மீது ஏற்கனவே அப்பாவி பொதுமக்களை தாக்குவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஆர். காவனூர் பகுதியில் குடிநீர் கேட்டு போராடிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது உருட்டுகட்டை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது.

மேலும், அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததுக்கு, அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., தினேஸ், அனைவரையும் தாக்கினார்.

இவ்வாறு, தான் செல்லும் இடமெல்லாம் தனது ஹீரோயிசத்தை காட்டுவதுக்காக பொதுமக்களை தாக்குவதும், எதிர்த்து கேட்கும் அப்பாவி மக்கள் மீது பொதுஇடம் என்றும் பாராமல் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்வதும் வாடிக்கையாகி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

மேலும், கொலை குற்றமே செய்திருந்தாலும் நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டுமே தவிர, மக்களை பொதுஇடங்களில் வைத்து தாக்குவது மற்றும் தாக்கிய பொதுமக்கள் மீதே கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து அவரின் காலை முறித்து சிறையில் அடைப்பது அராஜகத்தின் உச்சம் என்றும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here