ஹைத்ராபாத்: பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை வழக்கமாக பாகிஸ்தான் மருமகள், என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோஹிப் மாலிக்கை திருமணம் செய்ததால் இந்து அடிப்படைவாத அமைப்புக்கள் விமர்சிப்பார்கள். ஆனால் இன்று அவரை இந்திய நாட்டின் பாதுக்காப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஹைத்ராபாத்தில் உள்ள சானியா மிர்சாவின் இல்லத்தில் சந்தித்து மத்திய அரசின் 4 ஆண்டு சாதனையை விளக்கியது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமண் அவர்களையும் சந்தித்து 4 ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனையை பற்றி விவாதித்தார்.