மதுரை கீழடி கிராமத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணா நடத்திய தொல்ப்பொருள் துறையின் ஆராய்ச்சியில் வேத காலத்திற்கு முந்தைய சங்க காலத்தின் பொருட்களை கண்டுபிடித்தார். இதன் மூலம் தமிழர் நாகரீகம், ஹரப்பா நாகரிகத்தை விட பழமையானது என தெரியவந்தது. இதை விரும்பாத மத்திய அரசு, மூன்று கட்ட ஆராய்ச்சிக்கு திட்டமிட்டிருந்த நிலையில், இடையிலே அமர்நாத்தை, மார்ச் 2017ல் அஸ்ஸாமில் உள்ள கவுகாத்திக்கு மாற்றல் செய்தது. இதனை அடுத்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சியை பற்றி வெளியிடாமலே அக்டோபர் 2017ல் நிறுத்தியது மத்திய அரசு.

அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கீழடி அகழ்வாராட்சி, பற்றி உரையாற்ற தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் 31-வது ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜூன் 29 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 5000 பேர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு இந்திய தொல்லியல் துறை அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ண கிருஷ்ணமூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது கவுகாத்தியில் பணியாற்றி வரும் அமர்நாத், அமெரிக்கா செல்வதற்காக அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஏப்ரல் 26-ம் தேதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில் தொல்லியல் துறை துணை இயக்குநர் தாரா சந்தர் கடந்த மாதம் 25 ஆம்தேதி கவுகாத்தி மண்டல கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அமர்நாத் அமெரிக்கா செல்வதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இச்செயல் அமெரிக்க அமைப்புகளையும், தமிழக மக்களையும் அவமதிப்பது போல் இருப்பதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமர்நாத்தின் ஆய்வு பணிக்கு தொடக்கம் முதலே தடையாக இருந்த மத்திய அரசு கீழடியிலிருந்து, அசாமில் உள்ள முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு இடமாற்றம் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், கீழடி ஆய்வு குறித்தும், தமிழர்களின் தொன்மை நாகரிக வரலாறு குறித்தும், அமெரிக்க வாழ் தமிழர்களிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசிவிடக்கூடாது என்ற வன்மத்தின் காரணமாகவே, மத்திய அரசு அமர்நாத்துக்கு அனுமதி வழங்கவில்லை என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here