பெரும்பாலான குற்றவழக்குகளில், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைதான் முதலில் வருகிறது. ஆனால் சிபிஐயிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

சுப்பராயலு என்ற பாண்டிச்சேரி ஊர்க்காவல் படை சேர்த்த 29 வயது இளைஞன், முன்னாள் பாண்டிச்சேரி அமைச்சராக இருந்த ஒருவர் வீட்டில் பாதுகாப்புப் பணியில் வேலை செய்ததாகவும். அங்கே ஒரு காதல் விவகாரத்தில் 6-6-1999ல் காணாமல் போனவர், கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சவுக்கு சங்கர். மேலும் சுப்பராயலு காணாமல் போனதை விசாரித்த சிபிஐ அதிகாரி, பணமும், வீடும் வாங்கிக்கொண்டு, சுப்பராயலு தற்கொலை செய்து கொண்டதாக, வழக்கை முடிதாத்தாவும்.

பல ஆண்டுகளுக்கு பிறகு, வேறு ஒரு வழக்கில் குற்றவாளிகளிடம் விசாரணை செய்த பொழுது இந்த கொலை அம்பலமாகியதாகவும். ஆனால் அந்த வழக்கை விசாரித்த வேறு ஒரு சிபிஐ அதிகாரியை அப்போதைய உள்துறை அமைச்சர் மிரட்டி விசாரணையை கை விட உத்தரவிட்டதாக பிரபல புலனாய்வு பத்திரிகையான சவுக்கு இணையதளத்தில் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here