கோரக்பூர்: டாக்டர் காபீல் கான்னின், இளைய சகோதரர் காஷிஃப் ஜமீல்லை சுட்டு கொல்ல முயற்சி. இரு சக்கரவாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். கை, கழுத்து, மற்றும் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. அவர் சுடப்பட்டது பாதுகாப்பு நிறைந்த கோரக்பூர் கோவில் பகுதியில் தான். அவரை சுட்ட பொழுது முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் கோவிலில் தான் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
தற்போது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை பற்றி பேட்டியளித்த டாக்டர் காபீல் கான், “நாங்கள் அச்சத்துடனே வாழ்கின்றோம், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்”.
சுடப்பட்டவர் தான் சட்ட போராட்டம் நடத்தி 9 மாதங்களுக்கு பிறகு மருத்துவர் காபீல் கானை பிணையில் சிறையில் இருந்து மீட்டார். இதனால் தான் இவர் சுடப்பட்டுயிருக்கலாம்.