நடிகையாக அவதாரம் எடுத்திருக்கும் அபர்ணதி நடிகர் விஜய்யை விமர்சித்து அவரது தந்தையை புகழ்ந்து பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அபர்ணதி தற்போது இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் தந்தை நடித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அபர்ணதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இளைய தளபதிக்கு இனிமேல் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுப்பி விஜய்யின் தந்தை நடிப்பை புகழ்ந்து பேசினார். மேலும் பேசிய அவர், ட்ராபிக் ராமசாமி படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது கண்டிப்பாக ட்ராபிக் ஏற்படும் என்றும் கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசினார்.
ட்ராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விக்கி இயக்குகிறார். நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி படம் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகருடன் பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.