நாஞ்சிக்கோட்டை: இன்று நாஞ்சிக்கோட்டையில் நடந்த மக்கள் கலந்தாய்வு முகாமில் கலந்துகொண்டு பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, “தஞ்சைக்கு இராஜராஜ சோழன் சிலை வந்த நாள் தான், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அறிவிப்பு மத்திய அரசின் இதழில் வெளியானது. இராஜராஜ சோழன் சிலை வந்த அன்று முதல் தஞ்சை மக்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது” என்று கூறினார். மேலும் நாஞ்சிக்கோட்டை , மருங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 93 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பட்ட மாறுதலுக்கான ஆணையை வழங்கினார். மேலும் தமிழக தோட்டக்கலை துறை சார்பாக பொதுமக்களுக்கு ஒட்டு மர கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சமூகநலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, வருவாய் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துறைத்தனர்.