தஞ்சாவூர்: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை, என்று தண்ணீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த மறியலால் சுமார் இரண்டு மணி நேரம் நாஞ்சிக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை பற்றி பொதுமக்கள் கூறுகையில், தண்ணீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுது ஆனதால் கடந்த 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், ஊராட்சி தலைவர் இல்லாத நிலையில் ஊராட்சி அலுவலர்கள் மின் மோட்டரை பழுது பார்க்காமல் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினரும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here