ராமநாதபுரம்: கடந்த 3ஆம் தேதி சாலையோரத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளைஞரை பொதுமக்கள் முன்நிலையில் சட்டையை கிழித்து சரமாரியாக தாக்கிய போலீஸ் உதவி ஆய்வாளர் தினேஸ் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து ராஜ்குமார் மற்றும் வினேஷ் கைது செய்ததுடன், காவல்நிலையத்தில் வைத்து காலை முறித்து சிறையில் அடைந்துள்ளார். எஸ்.ஐ., தினேஸ் அந்த இளைஞரை தாக்கும் வீடியோ வைரலாக பரவியது. மேலும் தொலைக்காட்சி செய்திகளிலும் வெளியாகி பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவரான விக்னேஷின் தந்தை செல்வராஜ், அமைச்சர் மணிகண்டனுக்கு கட்சி பணிகளில் உதவியாக இருந்தவர். செல்வராஜ், காவலர்கள் காவல் நிலையத்தில் காலை உடைத்தது பற்றி முறையிடவே, அமைச்சர் நீதிமன்ற காவலில் இருக்கும் இருவரையும் 10ஆம் தேதி சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் நீதிமன்ற காவலில் இருப்பதால் சிறைத்துறை அனுமதி இல்லாமல் சந்திப்பது தவறு. ஆனால் அமைச்சர் உரிய அனுமதி இல்லாமல் சந்தித்ததாக தெரிகிறது. இந்நிலையில் காவல்துறை தங்கள் மீதான குற்றச்சாடை திசைத்திருப்ப, அமைச்சர் ரவுடியை சந்தித்து நலம் விசாரித்தார் என இந்த புகைப்படத்தை சில பத்தரிக்கையாளர்கள் மூலம் கசியவிட்டது.

கைது செய்யப்பட்ட குமார் என்ன ரவுடியா?
இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதாகவும் இவர் பெயர் கொக்கி குமார் என்றும் ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது. இவரை பற்றி இவரின் சொந்த ஊரில் விசாரித்தப் போது, இவர் மீது எந்த வழிப்பறி குற்றச்சாட்டும் இல்லை. இவர் தேவர் சாதியை சேர்த்தவர் என்றும், தன் சாதி மக்கள் எங்காவது பாதிக்கப்பட்டால் அதற்க்காக தன் ஊரில் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவார் என்றும் தெரிவித்தனர். இதே காரணத்திற்காக போராடும் சில தாழ்த்தப்பட்ட சாதிய கட்சியினரை, போராளியாகவும் இவரை ரவுடியாக சித்தரிப்பதாக அந்த மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் இதற்கு முன் அங்கு தொடர்ந்து பணிசெய்த இரு அதிகாரிகளும் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்த்தவர்கள் என்றும், அதனால் தன் சாதிக்காக போராடும் இவர் பழிவாங்கப்படுவதாக இவர்களின் உறவினர்கள் தெரிவித்தார்கள். மேலும் ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிடும் போது, இவர் ஒருமுறை தன் உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றதாகவும், அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு திருப்பத்தில் சைக்களில் வந்தவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் நின்ற காவலர்கள் இந்த விபத்தை பார்த்ததும், இரு சக்கரவாகனத்தை ஒட்டியவரை விட்டுவிட்டு, பின்னல் அமர்ந்து வந்த இவரை கைது செய்து சிறையில் அடைத்ததாக காவல்துறை மீது குற்றம் சாட்டினர். இது போன்று பொய்யாக பல வழக்குகளை பதிவு செய்ததால் மனமுடைத்த இவர், ஒருமுறை காவல்நிலைய வாசலிலே, தன் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அருகில் இருந்தவர்கள் இவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் . அதற்காக இவர் மீது தற்கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளது.

ஒருமுறை நீதிமன்றத்தில், தான் காரணமே இல்லாமல் கைது செய்யப்பட்டு கடுமையாக காவலர்களால் தாக்க படுவதாக புகார் அளித்தார். இதனை விசாரித்த நீதிபதி காவல்துறைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன் அந்த வழக்கில் இருந்தும் இவரை விடுதலை செய்துள்ளார்.

ஒரு காவல்துறை அதிகாரியின் மகள் கடற்கரையில் குடித்து விட்டு ஒரு காவலரை மிரட்டிய வீடியோ வைரல் ஆனது. சில நாட்களிலே அந்த வீடியோவை எடுத்த கடைநிலை காவலர் கை உடைந்து கட்டுடன் வந்தார். காவலருகே இந்த நிலைமை என்றால் காவல்நிலையத்தில் பொதுமக்கள் நிலை பற்றி கேட்கவா வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here