சென்னை: சேலம்-சென்னை 8 வழி சாலையை எதிர்ப்பவர்களை எல்லாம் நக்சலைட் என்று விமர்சித்து வருகிறார், தமிழகத்தின் சிறந்த தேசப்பக்தர் மற்றும் பிஜேபி தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா. இதே கருத்தை தான் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறிவருகின்றார். இது தேசத்தின் வளர்ச்சி திட்டம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த சாலையால் மக்களை விட அதிகம் பயனடைய போவது ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம் என்பதே பொது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
பிஜேபி வாங்கிய பணம் எவ்வளவு ?
கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் பிஜேபி மட்டும் 290.22 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்தமாக அரசியல் கட்சிகளால் வாங்கப்பட்ட நன்கொடையில் 89.22% சதவிகிதமாகும். இதில் ரூ.25,00,00,000 ஜிண்டாலின் “JSW Energy” அளித்துள்ளது. இந்த பணம் அனைத்தும் பிஜேபியின் ப்ரூடென்ட் எலெக்ட்ரோல் டிரஸ்ட் மற்றும் ஜனதா நிர்ஜாக் எலெக்ட்ரோல் டிரஸ்ட் மூலம் பெறப்பட்டது. ப்ரூடென்ட் எலெக்ட்ரோல் டிரஸ்ட்டுக்கு 2016-17 நித்தியாண்டில் நன்கொடை அளித்தவர்கள் பட்டியல் மற்றும் ஆவணத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
ஊருக்கு ஒரு நியாயம்:
பெங்களூரில் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட ரூ 1,800 கோடி செலவில் பாஸ்வேஸ்வரா சர்க்கிள் மற்றும் ஹெப்பால் இடையில் ஆனா ஸ்டீல் பாலம் அமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து இதே பிஜேபி. மேலும் பிஜேபி கட்சியை சார்த்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் இந்த திட்டத்திற்காக 812 மரங்களை வெட்டுவதற்க்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் இந்த மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதே பிஜேபி கட்சி தமிழகத்தில் காடுகளை அழித்து மேலும் 6400 மேற்பட்ட மரங்களை வெட்டி வீழ்த்தி போடப்படும் சேலம் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக உள்ளது. பிஜேபி எதிர்த்த பெங்களூர் பாலம் மக்களுக்கு அதிகமாக பயன் பட்டிருக்கும், ஆனால் அவர்கள் ஆதரிக்கும் இந்த சேலம் 8 வழிச்சாலையோ சாதாரண பொதுமக்களை விட பெரிய கார்போரேட் நிறுவனங்கள் தங்கள் பொருளை வேகமாக கொண்டுச்செல்ல பயனுள்ளதாக இருக்கும்.