நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் அருகில் உள்ள பாண்டூர் கிராமம் அமைந்துள்ளது, இந்த கிராமத்தில் 2 இடங்களிலும், பொன்னூர் கிராமத்தில் 2 இடங்களிலும் எடுக்கப்படும் எண்ணெய் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் குழாய் மூலம் குத்தாலத்தில் உள்ள ONGC சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக விளை நிலங்களில் 3 அடி ஆழம் வரை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. பாண்டூர் – பொன்னூர் சாலையில் உள்ள தனது நிலத்தில் ராஜதுரை என்பவர் தற்போது குறுவை நெல் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நடவு செய்யப்பட்ட நிலத்தில் நேற்று கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய்கள் உடைந்து கச்சா எண்ணெய் கசிய தொடங்கியுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் எண்ணெய் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குழாய் மூலம் எண்ணெய் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது. ஆனாலும் அதற்குள்ளாகவே கச்சா எண்ணெய் வயலில் கசிந்ததால் அப்பகுதியில் இருந்த நெற்பயிர்கள் வாடின.

இதனையடுத்து குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றி 10 அடி அகலத்திற்குத் தற்காலிகமாக பாத்தி கட்டி மற்ற இடங்களுக்குக் கச்சா எண்ணெய் பரவாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த பகுதியில் 6 மாதத்திற்கு முன்பே இதே போல் குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போதே இது போன்ற எண்ணெய் கசிவை தடுக்க எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படாததால் இங்கு மீண்டும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு எண்ணெய் எடுக்கும் பணியை கைவிட வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்கெட் பாய்ஸ் எங்கே?
ஒவருமுறை முறை விபத்து ஏற்படும் போது, இழப்பீட்டு தொகை கொடுத்துவிட்டு தங்களிடம் உள்ள அதிநவீன பக்கெட்களில் கச்சா எண்ணையை அள்ளிய உடன் தன் பணிமுடித்ததாக ஓஎன்ஜிசி நிறுவனம் கருதுகிறது. அந்த இடத்தில உள்ள மண்ணை எடுத்து விட்டு புதிய மண்ணை நிரப்பி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றபடிய மாற்றி குடுக்க வேண்டிய பணியை பணநேரங்களில் மறந்து விடுகிறார்கள் .

திருவாரூரில் கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட கச்சா எண்ணையை வாளியில் அள்ளிய போது எடுத்த படம்.

தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்தக்காலத்தில் சென்னை கடலிலே பக்கெட்டால் கச்சா எண்ணெயை அள்ளியவர்கள் நமது அதிகாரிகள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here