சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு, புகழ் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக, டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாணக்யா என்ற மாத இதழ், மாநில வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் சாணக்யா செய்தி, தமிழ்நாடு சிறப்பு வெளியீடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சாணக்ய செய்தி இதழை வெளியிட்டு பேசினார். அப்போது, தமிழர்கள் இந்தி மொழியை கற்று கொள்வதன் மூலம், வட மாநிலங்களுக்கு வேலைக்கு செல்வதற்கும், அங்கு வசிப்பதற்கும் எளிதாக இருக்கும் என்றார்.
ஆனால் ஹிந்தி பேசும் பல மாநிலங்களை விட தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். தமிழகத்திலிருந்து வட மாநிலத்திற்கு செல்லுவோரின் எண்ணிக்கை மிகமிக குறைவு. ஆனால் பல ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள், தமிழகத்திற்கு கூலி தொழிலாளர்களாகவும், பானி பூரி விற்கவும் வருகிறார்கள். ஒருசிலர் ஆளுநராகவும் பணியாற்ற வருகிறார்கள்.