கேரளாவின் உள்ள மலன்கரா ஆர்த்தோடெக்ஸ் சிரியன் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரிடம் சிறுவயதில் வேறு ஒரு பாரதியாருடன் பாலியல் தொடர்பில் இருந்ததற்காக பாவமன்னிப்பு கோரிய பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் பேசிய ஆடியோ தற்போது வைரல் ஆக்கியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக அவர் கூறியது, தங்களின் திருமணத்திற்கு முன்பு ஒரு பாதிரியாருடன் தன் மனைவிக்கு தொடர்பு இருந்ததாகவும், பின்னர் இவர்களின் குழந்தைக்கு மலங்கரா தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்த போது, மன உளைச்சல் அதிகமானதால் அங்கிருந்த ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார்.இதை அப்பெண்ணின் கணவரிடம் தெரிவித்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அவருக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்து வைத்த அந்த பாதிரியார், வேறு தேவாலயங்களைச் சேர்ந்த அவரின் நெருங்கிய சில பாதிரியார்களுக்கும் அனுப்பிவைத்தார். இதை வைத்தே அவர்களும் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். அந்த வீடியோவானது டெல்லியில் இருந்து கேரளா வந்த பாதிரியாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த டெல்லி பாதிரியார் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து மிரட்டி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓட்டல் அறையை காலி செய்யும் போது பணத்தை அப்பெண்ணையே செலுத்துமாறு சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
அந்தப் பெண் தனது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியது மின்னஞ்சலில் அறிக்கையாக வந்துள்ளது. இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியிடம் விசாரித்த போது இந்தத் தகவல்கள் அவருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 8 பாதிரியார்கள் தன் மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறியுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் வெவ்வேறு தேவாலயங்கள்ளைச் சேர்ந்த 5 பேரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இதுவரை காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை..