ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலை போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் “காப்பர் உருக்காலை விஷயத்தில் நான் ஒரு நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா மிகப்பெரிய அளவில் காப்பர் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரியும்.நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை” என்று கூறியுள்ளார்.

இதற்கு எதிப்பு ஏற்பட்ட நிலையில், “தான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ அல்லது எந்த அரசியல் கட்சிக்கோ ஆதரவாளர் இல்லை என்றும், ஆலையை மூடுவது தேசத்திற்கு நல்லது அல்ல என்றும், மேலும் சுற்றுச்சுழலலை பாதிப்பவற்றை சரிசெய்தால் மட்டும் போதும்” என்று மீண்டும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஜக்கி வாசுதேவ் பிரதமர் நரேந்திரமோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் பிரதமரின் பிஜேபி கட்சிக்கு அதிகமாக நன்கொடை கொடுப்பது ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா என்பது குறிப்பிட தக்கது.

கார்பொரேட் சாமியாரான இவர், காட்டை அழித்து ஆசிரமத்தை காட்டியதுடன், இங்கு விற்கப்படும் பொருள்களுக்கும், இதர சேவைக்கும் வாங்க கூடிய கட்டணத்திற்கு நன்கொடை ரசீது கொடுத்து வரிக்கட்டாமல் ஏமாற்றுவதாக புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here