அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதுப்போல் திருடியது காட்சி சிசிடிவி கேமராவில் சிக்கியது. மின் விளக்கை மட்டும் திருடிச்செல்ல ஒரு மனிதர் கடுமையான உடற்பயிற்சி செய்வது சிரிப்பை ஏற்பத்தித்தியுள்ளது .
கோயம்புத்தூர், சேரன் மாநகரில் உள்ள ஒரு கடைக்கு அருகில் உள்ள ஒரு நடைபாதையில் அருகே ஒரு நபர் புதன்கிழமை காலை நின்று கொண்டிருந்தார். ஒரு நிமிடம் அவர் கை, கால்களை நீட்டி உடற்பயிற்சி செய்ததை பார்த்தால் அவரின் உண்மையான குறிக்கோளை யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் யாரும் எதிர்பார்காதவகையில், அவர் கடைகள் முன் இருந்த மின் விளக்கை திருடி தன் பாக்கெட்டில் வைத்தது சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.