பெர்லின்: ஒரு ஊழியர் சகஊழியரின் மதிய உணவில் விஷம் கலந்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றிய 21 பேரின் இறப்புக்களை விசாரணை செய்கிறது ஜெர்மனிய காவல்துறை.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தன் கொண்டுவந்த உணவில் ஏதோ பொடிபோல கலந்து இருப்பதாக அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அவர்கள் விசாரணைக்காக காவல்துறையை அழைத்தனர். அவர்கள் சிசிடிவி வீடியோ பதிவை ஆராய்ந்த பொழுது, 56 வயதான ஊழியர் ஒருவர் சக பணியாளரின் lunchboxசை திறந்து ஒரு எதையோ வைப்பது பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபின் சந்தேக நபரின் பையில் ஒரு சிறிய பாட்டில் “பொடி போன்ற ஒரு பொருள்” கண்டுபிடிக்கப்பட்டது .

அந்த உணவை ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் லெட் அசிடேட்(lead acetate) எனப்படும் ஆபத்தான பொருள் கலந்து இருப்பது தெரியவந்தது. இது மனித உடல் உறுப்புகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்பு படை நிபுணர்கள் சந்தேகத்தின் அவரின் வீட்டை சோதனை செய்ததில் பாதரசம், ஈயம் மற்றும் காட்மியம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டிலேயே காணப்படும் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட “கனரக உலோக கலவைகள் உட்பட நச்சுப் பொருள்களை தயாரிப்பதற்கு நீண்ட காலம் முயன்றவர்” என்று போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்தில் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இருவரிடம் இந்த விஷத்தின் பாதிப்பை கண்டறிந்த பின்னர், அதிகாரிகள் விசாரணைகளை விரிவுபடுத்தினர். 2000 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தில், ஓய்வு பெறுவதற்கு முன்னரே இறந்த 21 முன்னாள் ஊழியர்ககளின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தில் வழக்கத்தைவிட அதிகமாக புற்றுநோய் மற்றும் மாரடைப்புகளால் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக போலீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என போலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here