ஜான்சி: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில், குடும்ப பிரச்சினை காரணமாக தன் கணவர் மீது புகார் அளித்தார். இதை விசாரிக்க காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவரை காவல்நிலையத்திற்கு அழைத்தனர். அங்கு வந்த கணவன், தன் மனைவியை பார்த்ததும் தன் மனைவிக்கு பிடித்தமான பாடலை பாடினார். இதை கேட்ட அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர் வடித்த அவர் தன் கணவரை கட்டி பிடித்து அழுதார். பிரிந்த அவர்கள் காவல்நிலையத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்த அவர்களை அனைவரும் வாழ்த்தினார். அவர்களும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.