புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில், திரையரங்குகளில் தின்பண்டங்கள் அதிக விலையில் விற்பனை செய்வதாகக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், திரையரங்குகளில் உணவுப் பொருட்களின் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், புனே நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் திடீரென்று புகுந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்காதது ஏன் எனத் திரையரங்கு மேலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தொண்டர்கள் மேலாளரை, மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்குச் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இந்தத் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுபோன்ற கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகளை யார் கேட்பது என்று தெரியவில்லை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here