பஞ்சாபில் உள்ள ரோமன் கத்தோலிக் டயோசிஸ் ஆப் ஜலந்தரின் பிஷப், பிராங்கோ முலக்கல். இந்த டயோசிஸுக்கு கேரள மாநிலம் கோட்டயம் அருகே குருவிலாங்காடில் கான்வென்ட் ஒன்று உள்ளது. இதைக் கன்னியாஸ்திரி ஒருவர் கவனித்து வந்தார். பிஷப் பிராங்கோ அந்த கன்னியாஸ்திரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாதக கோட்டயம் மாவட்ட போலீஸில் ஒரு கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார் .

அந்த புகாரில், ‘முதலில் 2014-ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து மிரட்டி பிஷப் பிராங்கோ பாலியல் வன்கொடுமை செய்தார். தொடர்ந்து இதே போல மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்தார். சர்ச் நிர்வாகத்திடம் இதைப்பற்றி புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போலீசில் புகார் கொடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிஷப் முல்லாக்கலும் கன்னியாஸ்திரி மீது புகார் கொடுத்துள்ளார். ’குருவிலாங்காடிலிருந்து கன்னியாஸ்திரி டிரான்ஸ்பர் செய்தோம். கன்னியாஸ்திரியும் அவர் உறவினர்களும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர். பின் என்னை மிரட்டினார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக ஆதாரம் இல்லாமல் இந்தப் புகாரை கொடுத்துள்ளனர்’ என்று பிஷப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கோட்டயம் போலீஸ் அதிகாரி ஹரிசங்கர் கூறும்போது, ‘இருவரும் மாறி மாறி புகார் கொடுத்திருக்கிறார்கள். அது பற்றி விசாரிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி விசாரணை நடத்திவருகிறார்’ என்றார்.

கோட்டயத்தில் பாதிரியார்கள் சேர்ந்து பாவ மன்னிப்புக் கேட்க வந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை அடுத்து வந்துள்ள இந்த புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here