சிவகங்கை: சிவகங்கை மாவட்டதில் உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தில் முப்பத்தியொரு ஆண்டுகளாக வெள்ளைத்துணி வைத்து மறைக்கப்பட்டிருந்த, விடுதலை வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலை, பொதுமக்களால் திறந்து வைக்கப்பட்டது
இதை அறிந்த இளையான்குடி வட்டாட்சியர், சிலையை மூடவேண்டும் என்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், இந்நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலையை மீண்டும் மூடி வைக்க 24 மணி நேர கெடு அரசுத்தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.00 மணியளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திட கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர். கிராம மக்களுக்கு மறத்தமிழர் சேனையின் தலைவர் புதுமலர் பிரபாகரன் வேண்டிய உதவிகளை செய்துவருகிறார்.