சென்னை: ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓ.பி.எஸ் மீதான சொத்து குவிப்பு புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் முதற்கட்ட விசாரணைக்கு தொடங்கியதுயுள்ளது. இந்த விசாரணையை உச்சநீதிமன்றத்தில் வழிக்காட்டுதல் படி இந்த விசாரணையை ஏழு நாட்களில் முடிக்கவேண்டிய நிர்பந்தம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏற்பட்டுள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை அடுத்து இந்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.