சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தம்பியை சென்னை கொண்டு வர ராணுவ ஹெலிகாப்டரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 2ஆம் தேதி மதுரையில் இருந்து பன்னீர்செல்வதின் தம்பி சென்னை கொண்டு வரப்பட்டார். ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பியதை பத்திரிகையாளர்களிடம் சொன்னதால் பன்னீர்செல்வம் மீது நிர்மலா சீதாராமன் கோபமாக உள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ விமான விவகாரம் வெளியானதை அடுத்து நேற்று டெல்லியில் பன்னீரை சந்திக்க நிர்மலா மறுத்ததாக கூறப்படுகிறது. தனி ஒருவருகாக ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பிய நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பி.எஸ். இரண்டாவது சகோதரர் பாலமுருகன் மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதிக மது அருந்தியதால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அப்பலோவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து பாலமுருகனை சென்னை கொண்டு வர ராணுவ ஹெலிகாப்டரை நிர்மலா தான் அனுப்பினார் எனவும், பாலமுருகனுக்காக சிறப்பு ஹெலிகாப்டர் பெங்களூருவில் இருந்து மதுரை வந்தது எனவும் கூறப்படுகிறது.

டீ கடை அமைக்க உதவிய பாலமுருகன்:
ஆரம்பகாலத்தில் பன்னீர் “பிவி கேன்டீன்” என்னும் பெயரில் டீக்கடைதொடங்க சிட்டி யூனியன் வங்கியில் ரூ.20 ஆயிரம் கடன் பாலமுருகன் பெயரில் தான் கடன் பெற்றார் மேலும் பன்னீர்செல்வம் தான் அந்த கடனுக்கு உத்தரவாத கையெழுத்தை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடன், பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், 2003ம் ஆண்டு திருப்பிச் செலுத்தப்பட்டது .டீ கடை அமைக்க உதவிய பாலமுருகனை காப்பாற்றத்தான் நிர்மலா சீதாராமனின் உதவியை பன்னீர்செல்வம் நாடினார் என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here