சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் திருடிய பெண் போலீஸ் கான்ஸ்டபிளை, காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். G1 வேப்பேரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் நந்தினி. இவர் எழும்பூரில் உள்ள நீல்கிரிஸ் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு ரூபாய் 115 மதிப்புள்ள சாக்லேட்டுகள் மற்றும் ஓடோமாஸ் உள்ளிட்டவற்றை திருடியது சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து அவரிடமிருந்து போராடி அந்த பொருட்களை மீட்டெடுத்த கடை ஊழியர்கள், திருடியதை ஒப்புக்கொண்டு கையெழுத்திட கோரினர். அவரும் கையெழுத்திட்டு கிளம்பி சென்றார்.
ஆனால், வீட்டுக்கு சென்று தனது கணவர் மற்றும் மகனிடம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி அழுதுள்ளார். நந்தினியின் கணவன், மகன் உள்ளிட்ட மூவர் கடைக்கு வந்து கடை உரிமையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாாகியுள்ளன.
காவல் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருடி மாட்டியதால், நந்தினியை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.