இம்பால்: லெப்டினன்ட் கர்னல் தாராம்வீர் சிங் கடந்த 32 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றார். பல பதக்கங்களை பெற்ற இவர், இலங்கை சென்ற அமைதிப்படையில் விடுதலைபுலிக்குக்கு எதிராக போரில் சண்டையிட்டார், கார்கில் போரில் இவர் சண்டையிட்டு முக்கிய பகுதிகளை கைப்பற்றினார்.
2009 ஆம் ஆண்டு மும்பையில் தன் வீட்டிற்க்கு செல்லும்வழியில், பாதாள சாக்கடையில் நச்சு வாயுக்களால்
தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய இரு துப்புரவு பணியாளர்களை பாதாளசாக்கடையில் இருந்து வெளியேற்றினார். அப்போது நச்சு வாயுக்களால் பாதிக்கப்பட்ட இவர, சில நாட்களுக்கு ICU இல் சிகிச்சை பெற்று மரணத்திலிருந்து தப்பினார்.
கடந்த ஜூலை 1 தேதி, கேணல் ரஞ்சன் சிங், உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார்.ஜூலை 20, 2018 தாராம்வீரின் மனைவி மணிப்பூர் உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் இராணுவ காவலில் வைக்கப்பட்டதற்கான சில காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூரில் நடக்கும் போலி என்கவுண்டர், மிரட்டி பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளை செய்துவரும் ராணுவ உளவு பிரிவை பற்றி தாராம்வீர் சிங் செப்டம்பர் 2016 ல் இராணுவ அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இராணுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பெயரில் புகார் கடிதத்தை திரும்பப் பெற வைத்தனர்.
பின்னர், சில மூத்த அதிகாரிகள் பழிவாங்குவதாகவும், அவரைத் தொந்தரவு செய்வதற்காக ஒரு குழுவாக செயல்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே கொலை மற்றும் மிரட்டி பணம் சம்பாதிப்பது போன்ற செயலின் ஈடுப்பட்டு வருவதாகவும் மேலும், ஐந்து நபர்கள் படுகொலை செய்யப்பட்டதை பற்றியும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண் குழந்தையுடன் அதே புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் ரூபாய் 1 கோடி பெற்று கொண்டு விடுவித்ததையும் விளக்கியுள்ளார்.