நெல்லூர்: விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் மயங்கிய நிலையில் காவல் நிலையத்தின் வாசலில் கிடந்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், காவல்நிலையத்தில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின் இங்கிருந்த காவலர்களை சரமாரியாக தாக்கினர். அவர்களுடன் வந்து இருந்த பெண்கள் அங்கிருந்த போலீஸ் எஸ்.ஐ யை செருப்பால் அடித்தனர். இந்த தாக்குதலின் காயம் அடைந்த 3 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் பொது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி தெளிவான தீர்ப்பை வழக்கியுள்ளது. பெண்களை இரவில் விசாரணைக்கு அழைக்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . ஆனால் சட்டத்தை மதிக்காமல் காவல்துறையினரே நடந்து கொள்வதால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.