ஃபேஸ்புக் லைவ்இல் விஷம் குடித்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் விவசாயி! காரணம் யார்?

நாகப்பட்டினம்: கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் அருகில் உள்ள தலைஞாயிறு பகுதியை சேர்த்தவர் . நிவாரணம் கேட்டு போராடிய இப்பகுதியை சேர்த்த விவசாயிகள் மீது வழக்கு போட்டு அவர்களை காவல்துறை மிரட்டி வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டு போராடிய விவசாயி இனியவனின், தந்தை மற்றும் அண்ணன் கைது செய்து அலைகளிக்க படுவதாகவும், மேலும் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த தொல்லைகளை தாங்க முடியாமல் விஷம் குடித்தார், இந்த இளைஞர்.

 

அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த படித்த பட்டதாரி மாணவன் தற்கொலை செய்வதை நீங்க எல்லாரும் நேரா பாருங்க நான் தற்கொலை செய்வதற்கு காரணம் யார் என்று எங்க பகுதி மக்கள் இடம் கேளுங்க நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு. அதாவது என் பெயர் இனியவன் ஐயா முதலமைச்சர் எடப்பாடி ஐயா அப்படிங்கிற வாசகத்துடன் கஜா புயலின்போது தொலைக்காட்சியில் பேசியிருப்பேன் எங்கள் பகுதி கஜா புயலால் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதி இந்த பகுதி மக்களின் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டாஸ் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர் குறிப்பாக நான் தொலைக்காட்சியில் பேசிய காரணமாக என் மீது அதிக வழக்குகள் போடப்பட்டு தேடி வருகின்றனர் என்னைக் ஒரு கொலை குற்றவாளி போல தேடி வருகின்றனர் இதன் காரணமாக மனது வேதனை உடைந்து நான் வந்து விவசாயம் பண்ண அந்த விவசாயத்தில் வர காச வச்சு தான் இன்னைக்கு நீதிமன்ற செலவு பண்ற ஒரு சூழ்நிலை உருவாகி கொடுத்திருக்காங்க இதை அனைத்து தமிழர்களும் கேட்கணும் அப்படி கோரிக்கை வைத்து எங்க பகுதி மக்கள் அனைவரும் விடுவிக்கவும். நாங்கள் எங்கள் பகுதி மக்கள் அனைவரும் கஷ்டப்பட்ட காலத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை நான் எடுத்த முடிவு கோழைத்தனம் அல்ல இந்த நிலைமைக்கு என்னை மட்டுமல்ல இன் பகுதி மக்கள் அனைவரையும் இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்தான் கோழை அனைவரிடமிருந்து விடை பெறுகிறேன்”

#டெல்டா #மக்களின் #ஒவ்வொருவரின் #எண்ணங்களை #பிரதிபலித்த #சகோதரர் #முதல்வரே இதற்கு உங்களின் பதில் என்ன?????

Posted by வேதாரண்யம் on Tuesday, November 20, 2018

 

ஃபேஸ்புக் லைவ்இல் விஷம் அருத்தியதை பார்த்த இவரின் நண்பர்கள், இவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேத்துள்ளனர். இனியாவது இந்த அரசும் , காவல்துறையும் புயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கனிவாக நடந்துகொள்ளுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here