இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து உள்ளாட்சித் துறைக்கு நிதி கேட்டனர் நமது உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியும், மின்துறை அமைச்சர் தங்கமணியும். தனது சகோதரருக்க்காக துணை முதல்வர் பண்ணீர்செல்வம் போல், இந்திய விமானப்படை விமானந்தை வாடகைக்கு கேட்டால், நிர்மலா சீதாராமனால் கொடுக்க முடியும். ஆனால் நிதி கொடுக்க முடியுமா என்பது நம்மை இவர்களிடம் விட்டு சென்ற அம்மாவின் ஆன்மாவிற்குத்தான் தெரியும்.
தமிழக அமைச்சர்களின் தனி திறமை:
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இறுதியாக மருத்துவமணையில் அனுமதிக்கப்படும் வரை, அதிமுக அமைச்சர்கள் யாரும் பெரிதாக பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கவில்லை. அதனால் அவர்களின் திறமை தமிழக மக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றோ அறிவியல் விஞ்ஞானி, பின்னணி பாடகர் என பலரும் தங்கள் திறமைகளை காட்டி மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.