தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், 3 வாரங்களுக்குள் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலை சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஏன் ஆலை தொடர்ந்து இயங்கக்கூடாது?” என ஆலை நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அனுமதியளித்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. “ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவு தொடரும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்ற ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அதேபோல் உடனே இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள நிபந்தனைகளின் கீழ்தான் ஆலையை செயல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பிஜேபிக்கு சட்டவிரோதமாக பணத்தை வாரி இரைத்த வேடந்தாவின் ஸ்டெர்லைட் ஏன் ஆலை திறக்கப்படுகிறது?
வேடந்தாவிடம் சட்டவிரோதமாக நன்கொடை பெற்ற காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியை குற்றவாளி என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஒரு குற்றவாளியிடம் அதிகாரம் கிடைத்தால் எப்படி அவன் செய்த குற்றத்தை சட்டப்பூர்வமாக மாற்றுவனோ அதுபோல், இந்த பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் முன்தேதியிட்டு ஒரு மனதாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து தங்கள் தவறை சட்டப்பூர்வமாக மாற்றினார்கள்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் ஏற்கனவே தங்களிடம் பணம் வாங்கிய அரசியல்வாதிகள் யார் என்பதை வெளியிடுவோம் என மிரட்டி இருந்தார். இதன்முலம் ஸ்டெர்லைடிடம் பலர் பணம் பெற்று இருக்கலாம் என்று தெரிகிறது.
மக்களை ஏமாற்றினாரா எடப்பாடி?
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் ஆலையை மூட இட்ட உத்தரவு செல்லாது என்பதை அப்போதே சட்ட வல்லுனர்கள், நீதிபதிகள் எடுத்து உறைத்து இருந்தார்கள். அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடமுடியும் என்று அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால் தான் இட்ட உத்தரவு செல்லும் என்று மீண்டும் மீண்டும் கூறி மக்களை ஏமாற்றி வந்தார்.
பிரதமர் மோடி, இட்ட பணியை சிரம் ஏற்று செய்பவர் நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் பிரதமர் மோடியின் கட்சிக்கே நிதியை வாரிவழங்கும் ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக பிஜேபியின் பகைக்கு ஆளாக நேரிடும் அது அவரின் ஆட்சிக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
முதலமைச்சர் எடப்பாடியின் காவல்துறையால் கொல்லப்பட்ட இவர்களின் உயிர் தியாகம் வீணானது.