கடந்த ஜனவரி 12ஆம் தேதி கேரளாவில் எர்ணாகுளம் அருகில் உள்ள முனம்பம் துறைமுகம் வழியாக 200க்கு மேற்பட்ட ஈழ தமிழர்கள் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
போலீஸ் நடத்திய விசாரணையில் இவர்கள் தமிழ்நாடு மற்றும் டெல்லியில் உள்ள ஈழ தமிழ் அகதிகள் என்றும் அவர்கள் 1.2 கோடி ரூபாய் கொடுத்து பெரிய படகு ஒன்றை வாங்கியதாகவும் மேலும் பன்னிரண்டாயிரம் லிட்டர் டீசல் வாங்கிக்கொண்டு கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையின் பாதுகாப்பையும் தாண்டி சர்வதேச கடற்பகுதியை அடைந்து விட்டதாக தெரிகின்றது. தற்போது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற விபரத்தை அறிய கடற்படை தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது.