ஜனவரி 14ஆம் தேதி ஆந்திராவில் ராஜமாஹேந்திராவரம் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) தளத்தில் இருந்து காணாமல் போன கதிரியக்க சிசியம்-137 புதன்கிழமை கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு காயலான் கடையில் கண்டுபிடிக்கப்பட்டது..
கண்டுபிடிக்கப்பட்ட கதிரியக்க பொருட்களை தேசிய பேரிடர் மீட்பு குழு(NDRF) மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகளும் அடையாளம் காட்டினார், ஆனால் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. “குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் கைது செய்யப்படுவார்,” என ராஜமாஹேந்திராவரம் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ஒரு டிரக்கில் இருந்து காணாமல் போன சில கிராம் மட்டுமே உள்ள இந்த கதிரியக்க பொருளின் மதிப்பு 27 லட்சம் ரூபாய்.
தீவிரவாதி கையில்:
இந்த கதிரியக்க பொருளால், இதனை சுற்றியுள்ள 2 மீட்டர் வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு வேலை தீவிரவாதிகள் கையில் சிக்கி, மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம். மார்கெட் போன்ற இடத்தில் வைத்திருந்தால் பல ஆயிர கணக்கான மக்கள் பாதிக்க பட்டு இருப்பார்கள்.ஒரு கதிரியக்க பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத இந்த ஓஎன்ஜிசி தான் நாகையில் விவசாய நிலங்களை பாழாக்கிவருகிறது.