அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கூடாது என டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் உத்தரவை மதிக்காத பிஜேபி கட்சியினர் மதுரைக்கு வந்துள்ள அவர்களின் கட்சி தலைவர்களான நரேந்திர மோடி மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜனை வரவேற்று டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளார்.
இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து #GoBackModi ட்விட்டரில் உலகளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இதற்கு போட்டியாக பிஜேபியினர் #TNWelcomesModi என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.